Pages

Friday, November 30, 2012

S.No: 0009 (verse 41-45)


--->

41: சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

To them He comes, who, in heart's deep confines
Treasure His Name,
The Lord who consumed the deathly poison of hatred born,
Consorting with Her of the gleaming brow,
Conjoint, like the pairing deer in amity sweet.

42: போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

They alone attain His Feet, who seek and praise;
To them He shall grant the world the Four-Headed one made;
Full well the elect come, the world of Maya girdling,
One is He with Her of the shoulders reed-shaped.

43: அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே.

To them that speak of Hara's Holy Feet and weep,
To them that daily muse at the Great One's mighty feet,
To them that, in deep devotion fixed, wait to serve,
To them comes the Eternal's all-filling Grace.

44: போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

"Glory to the Holy Feet," the Devas chant,
"Glory to the Holy Feet," the Asuras hymn,
"Glory to the Holy Feet," the humans, too, echo,
Thus I gloried Him, and in my love He shone.

45: விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

Except by Fate He decrees this sea-girt world revolves not,
Except by Fate He decrees do joys and age arrive not,
Daily pray to the Light Effulgent;
The Divine Path He'll prove, the Sure Sun He'll be.