Pages

Tuesday, December 4, 2012

S.No: 0013 (verse 60-65)


-->
60: அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

The Agamas, the Lord by Grace revealed,
Deep and baffling even to the Gods in Heaven;
Seventy billion-millions though they be;
Like writing on the waters, eluding grasp.

61: பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

The Infinite revealing the Infinite Vast
Came down to earth, Siva's Dharma to proclaim,
The immortals, then, Him as Nandi adored,
And He stood forth the Agamas artic'lating.

62: சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.

From Siva the Infinite to Shakti and Sadasiva,
To Maheswara the Joyous, to Rudra Dev and Brahmisa,
So in succession unto Himself from Himself,
The nine Agamas our Nandi begot.

63: பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.

The Agamas so received are Karanam, Kamigam,
The Veeram good, the Sindam high and Vadulam,
Vyamalam the other, and Kalottaram,
The Subram pure and Makutam to crown.

64: அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

Numberless the Sivagamas composed,
The Lord by His Grace revealed;
Yet they know not the wisdom He taught;
Like writing on water, the unnumbered fade.

65: மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

Devoid alike of rain and summer's gift of dew
Even the flashing lake had lost it's vernal bloom
Then did He in Sanskrit and Tamil at once,
Reveal the rich treasure of His Compassion to our Lady Great.