Pages

Monday, December 17, 2012

Daily 1 hymn of Tirumantiram with Explanation - [hymn-114]

114: களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே

பொருள் விளக்கம்:
எம் இறைவனாகிய நந்தி, மன அழுக்கைத் துடைத்தெறிந்தான். அவனுடைய அருள் நோக்காலே அகக் கண் திறக்க, என் அஞ்ஞான இருளகன்று ஓடியது. அழுக்கு, குற்றம் குரை அண்டாத பேரொளிப் பிழம்பான அவன் திருவருட் பார்வையாலே தூய்மை பெற்ற, மாசற்ற பளிங்கு போன்ற உள்ளத்துள்ளே, தன் சிவந்த திருவடிகளாகிய பவழநிறப் பாதங்கள் பதியச் செய்தான். அவனே எம் தலைவன்.

ENGLISH  

kaLimpaRuth thAnenGkaL kaNNudhal nNanNdhi
kaLimpaRuth thAnaruT kaNvizip piththuk
kaLimpaNu kAdha kadhiroLi kATTip
paLinGkiR pavaLam padhiththAn padhiyE 
 
He Planted His Feet on My Heart

MEANING
All impurity He shattered--our Nandi, Forehead-eyed,
Shattered to pieces before His opening Eye of Grace,
His Eye, at whose radiant light impurity quails;
So transfixed He His Coral Feet on heart of mine, Crystal turned.